விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியான வண்டிப்பாளையம், நாணக்கல்மேடு வண்டிப்பாளையம், புதுப்பாக்கம், கே என் பாளையம், திருக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து  ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா தாக்கத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கன மழையின் காரணமாகவும் புயல் எச்சரிக்கை காரணமாகவும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 



நடுக்குப்பம் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகவும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வரும் பழனிவேல் என்பவர் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இச்சூழலில் பள்ளியில் உள்ள பெண் பிள்ளைகள் நெற்றியில் பொட்டு வைத்து வருவதை பார்த்து பலமுறை இவர் கண்டித்திருக்கிறார். நீங்கள் எல்லாம் போட்டு வைக்கக்கூடாது என ஆசிரியர் பழனிவேல் கூறியுள்ளார். இந்த நிலையில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பயின்று வரும் ஒரு மாணவி இன்று வீட்டில் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார். எதற்காக செல்ல மாட்டாய் என அந்த மாணவியின் பெற்றோர் விசாரித்தனர்.



எங்களுக்கு பாடம் நடத்தி வரும் வணிகவியல் ஆசிரியர் பழனிவேல் என்பவர் என்னை பார்த்து நெற்றியில் இருக்கும் பொட்டை பார்த்து அந்த ஆசிரியர், உனக்கு ஒரு பொட்டு இருந்தால் ஒரு புருஷன் இரண்டு போட்டு வைத்திருக்கிறாய் உனக்கு என்ன இரண்டு புருஷனா என கூறி என்னை உடம்பில் தவறான முறையில் தொட்டார். எனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறி அழுதுள்ளார்.



இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு மாணவியை அழைத்து வந்தனர். சம்பவம் குறித்து பெற்றோர்கள் தெரிவித்தனர் புகாராக எழுதி சம்பந்தப்பட்ட உதவி தலைமையாசிரியர் பழனிவேலை வேலை இடமாற்றம் செய்ய வேண்டும் மற்றும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதைதொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மரக்காணம் வட்டாட்சியர் மற்றும் கோட்டகுப்பம் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பெற்றோர் கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர். புகாரின் பேரில் உதவி தலைமை ஆசிரியர் பழனிவேலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.