கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பள்ளி மாணவ மாணவிகள் படிக்கட்டில் தொங்கி செல்வது, மது அருந்துவது, ஆசிரியர்களை மிரட்டுவது உள்ளிட்ட வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களை மாணவ மாணவிகள் மதிக்க வேண்டுமென பல காலமாக கூறப்பட்டு வந்தாலும் மாணவர்களின் இத்தகைய செயல்கள் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

 



 

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு படிப்பை விட ஒழுக்கம் மிக முக்கியமான ஒன்று என பலரும் தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேனியில் மாணவர்கள் சிலர்,நான் ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில், போட்டா பெயில் என்று மிரட்டி பேசும் மாணவனுக்கு பயந்து 3 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லை என மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

 



இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், மற்றொரு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆதனூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரை மாணவன் ஒருவன் கெட்ட வார்த்தையால் திட்டி அடிக்க முயலும் காட்சி ஒன்று தற்போது இணையதளத்தில் பரவிவருகிறது. பள்ளி இறுதி தேர்வு வர உள்ள நிலையில் மாணவன் தேர்விற்கு தயாராகமல் பள்ளி அறையில் தூங்கியுள்ளான் இது தொடர்பாக ஆசிரியர் மாணவனை கேள்வி கேட்டதற்கு, ஆசியரை மாணவன் அடிக்க முயன்றுள்ளார். மாணவன் அடிக்க முயலும் போது என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியர் அதிர்ச்சியாகி நிற்கும் காட்சிகள் வேதனையை ஏற்படுத்துகிறது. மேலும் மற்றொரு மாணவன் ஆசிரியரை சூழ்ந்து கொண்டு திட்டும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



 

இதனைத் தொடர்ந்து மாதனூர் அரசு பள்ளியில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை நடத்தி நிலையில், மாணவரை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தாவரவியல் ரெக்கார்ட் நோட்டை சமர்ப்பிக்காமல் பாய் போட்டு தூங்கியுள்ளார். தட்டிக்கேட்ட ஆசிரியரை மாணவர் ஆபாசமாக திட்டி அதுமட்டுமில்லாமல் மிரட்டல் விடுத்த வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.