ஒரு பெண் தனது மகனை திருமணம் செய்து கொண்ட ஒரு வினோதமான நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பாஸ்பூரில், தனது மனைவி முதல் கணவரின் மகனை திருமணம் செய்துகொண்டு, வீட்டில் இருந்து ரூ.20,000 பணம் கொண்டு சென்றதாக இரண்டாவது கணவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்திரராம் என்ற அந்த நபர், தனது மனைவி முதல் கணவரின் மகனை திருமணம் செய்து செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
என்ன நடந்தது?
போலீஸ் புகாரில், பாப்லி என்ற பெண்ணை திருமணம் செய்து பதினொரு வருடங்களாக குடும்பம் நடத்தியதாக இந்திரராம் கூறியுள்ளார். அப்பெண்ணுக்கு முதல் கணவரிடமிருந்து இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இந்திரராமைத் திருமணம் செய்தபோது வீட்டைவிட்டு வெளியேறினர்.
இந்திராமும் பாப்லியும் சேர்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர். பின்னர், பாப்லியின் முதல் கணவரின் மகன்களில் ஒருவர் வீட்டிற்கு வரத் தொடங்கினார் என்று இந்திராம் தனது போலீஸ் புகாரில் கூறினார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், வீட்டில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெற்ற மகனை தாயே திருமணம் செய்துக்கொண்டது அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்