நண்பர்களாக இருந்து, காதலர்களாக மாறி பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்ட  காதல் தம்பதிகள்தான் சமந்தா - நாக சைதன்யா. இந்த ஜோடிகளுக்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் சமந்தாவும் நாக சைத்தன்யாவும் ஒருமனதாக விவாகரத்து செய்துக்கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்திற்கு பிறகு சமந்தா தான் எதிர்க்கொண்ட சவால்களையும் , நாக சைத்தன்யா குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.


 




சமந்தா பகிர்ந்ததாவது :


"நாம் ஒரு அழுத்தம் மிகுந்த , அதிகம் உற்றுநோக்கக்கூடிய சமுதாயத்தில் இருக்கின்றோம் என நம்புகின்றேன். சமூக வலைத்தளங்களில் சிறப்பான வாழ்க்கை என்றால் என்ன என்பதற்காக முன் நிறுத்தப்படுகிறோம்.  அதிகம் உற்றுநோக்கப்படுவதால் நான் என்னுடைய பலவீனங்கள் , பதற்றம் , வலி என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பேசுவதற்கு முடியாது. ஏனென்றால் நான் சமூக வலைத்தளங்களில் அதீத ஆக்டிவாக இருக்கும் பொழுது , என் மீதான ஃபோக்கஸும் அதிகமாக இருக்கிறது. யாருடைய வாழ்க்கையும் சிறப்பான ஒன்று கிடையாது! அடித்து சொல்லுவேன் யாருடைய வாழ்க்கையும் பர்ஃபெக்ட் கிடையாது. எங்களை போன்றவர்கள் , என்னை போன்றவர்கள் சினிமாவின் ஜொலிப்பு , கிளாமர் என அனைத்தையும் பேசுவது போல உங்களது வலி , கடினமான சூழல் , தாழ்வுகள் என அனைத்தை பற்றியும் அதிகமாக பேசுங்கள். அதுவும் சாதாரணமனாதுதான்.  நாம் எல்லோருமே கடினமான சூழல்களை கடந்து வருவதும், அது குறித்து பேசுவதும் சாதாரண ஒன்றுதான். அதேபோல மற்றவர்களிடம் அதிலிருந்து வெளியே வருவதற்கான உதவியை கோருவதும் சாதாரண ஒன்றுதான். நான் எனது வாழ்க்கையில் கடினமான நேரத்தை கடந்து வந்திருக்கிறேன். நான்  உதவி கேட்டேன்.  என் நண்பர்கள் , ஆலோசகர்கள் எல்லோரும் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார்கள். நான் எனது வாழ்க்கையில் அடுத்த பகுதிக்கு தயாராகிவிட்டேன். அது நான் மனவலிமை கொண்ட பெண் என்பதால் அல்ல , என்னை சுற்றி இருந்த பல பேர் என்னை அப்படியாக மாற உதவி செய்தார்கள். இதுதான் நமக்கான தாழ்வுகளை , சாதாரணமாக கடப்பதற்கும் , உதவிகளை கேட்பதற்கும் சரியான  நேரம் என நினைக்கிறேன். நாம் எலும்புகள் உடைந்திருந்தால் , மருத்துவரை நாடி அவர்களிடம் உதவி கேட்போம் அல்லவா! அதைப்போலத்தான் நம் இதயம் உடைந்திருந்தாலும் மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டும்.  உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்கள் எப்போதும் கால் பண்ணுங்க, கால் பண்ணுங்க என சொல்வதில்லை. அது போலத்தான் நமது நண்பர்களும்  குடும்பமும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்.  ஆனால் இப்போது அப்படியாக சொல்ல வேண்டிய நேரம். உனக்காக நாங்கள் இருப்போம், என்ன உதவி வேண்டுமோ கேள் என குடும்பமும் நண்பர்களும் சொல்ல வேண்டும்.. எனக்கு ரசிகர்கள் , பணம் , வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் என எதுவுமே  என்னிடம் இருந்தது கிடையாது. என் வாழ்க்கையில் வந்த எல்லோருமே சம்ந்தா ஒரு சிறந்த வெற்றிகரமான நடிகை என்பதை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நாக சைதன்யா மட்டும்தான் இது எதுவுமே இல்லாத சமந்தாவை பார்த்தார். chai எனக்கு எப்போதுமே ரொம்ப ஸ்பெஷலான மனிதர்தான். ஏனென்றால் அவர் என்னுடைய பெஸ்ட் ஃபிரண்டாக இருந்திருக்கிறார். எங்களுக்கு இடையில் இருக்கும் நட்பு  9 வருடங்கள். நாங்கள் ஒருவரை ஒருவோர் புரிந்துக்கொண்டதால்தான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறோம் . அந்த நட்பு எப்போதும் முடிவுக்கு வராது." என்றார் சமந்தா.