உத்தரப் பிரதேசத்தில் நடுரோட்டில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.


உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


வீடியோவில், பரபரப்பான சாலையின் நடுவில் மூன்று பேர் ஒரு நபரை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்துவதைக் காணலாம். இரண்டு பேர் பாதிக்கப்பட்டவரை கீழே சாய்க்கிறார்கள்.  மற்றொருவர் அவரை கத்தியால் குத்துகிறார். தாக்குதலுக்குப் பிறகு மூன்று பேரும் வெவ்வேறு திசைகளில் வெளியேறுவதைக் காணலாம். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர் ரத்தம் தோய்ந்த சட்டையுடன் எழுந்திருக்க முயற்சிக்கிறார். சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் தாக்குதலுக்கு பின்னர் கையில் கத்தியுடன் விரைந்து வந்து அவரை முதுகில் குத்தி தரையில் தள்ளுவதைக் காணலாம். பின்னர் அவர் மார்பில் இரண்டு முறை குத்தினார்.


 






சம்பவம் நடைபெற்றபோது, சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. பாதிக்கப்பட்டவர் ரத்தத்தில் நனைந்த ஆடைகளுடன் சாலையில் கிடப்பதைக் காணலாம். அவர் நகர முயற்சிக்கிறார். நடுரோட்டில் வலியால் துடிக்கிறார். சிறிது நேரத்தில் உயிரிழக்கிறார்.


தனிப்பட்ட தகராறு காரணமாக, இறந்தவரின் மாமாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறிய போலீஸார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண