உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் உனனா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு பெண் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு நீண்ட காலமாக ஒரு ஆண் நண்பர் இருப்பதாக கூறப்படுகிது. இவர்கள் அடிக்கடி நேரில் சந்திப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அவர் பெற்றோர் மற்றும் தங்கை நேற்று ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த அந்த நபர் செல்போனில் வீட்டிற்கு வருவதாக அந்த பெண்ணிடம் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதை கேட்காமல் அந்த நபர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வருவதற்கு முன்பு ஊட்டச்சத்து மாத்திரையை உட்கொண்டதாக கூறப்படுகிறது. பின்பு, அந்த பெண்ணை பாலியல் வன்கொமை செய்துள்ளார். குறிப்பாக பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வரும்வரை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வருவதை பார்த்த அந்த நபர் அதிர்ச்சியடைந்து அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்பு, வெளியே சென்ற பெற்றோர் மற்றும் தங்கை வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் அந்த பெண் கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளதாவது, “அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. மேலும் பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வரும் வரை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயிரிழந்த அந்த பெண்ணின் தந்தை உனனா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து குற்றவாளியான கௌதம் என்பவரை கைது செய்துள்ளனர்.
பின்பு போலீசார் கூறியதாவது, " இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள 25 வயதுடையை நபரும், பின்பு 68 வயதான பெண்ணும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவித்தார். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க