Crime: அமெரிக்காவில் ஒருவர் தனது சொந்த மகனேயே வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காணாமல்போன சிறுவன்


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரூடி ஃபரியாஸ். இவருக்கு தற்போது 25 வயதாகிறது. 2015-ஆம் ஆண்டு 17 வயதாக இருக்கும்போது காணாமல் போனதாக இவரது  தாய் தரப்பில் இருந்தே புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அங்குதான் அந்த சிறுவனுக்கு கொடுமை நடந்துள்ளது.


காணாமல் போனதாக நினைக்கப்பட்டிருந்த நிலையில், இவர் சுமார் 8 ஆண்டுகள் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இளைஞர் ரூடி ஃபரியாஸ், தனக்கு நேர்ந்த கொடுமையை சமூக ஆர்வலர் குவாலெனிடம் விவரித்துள்ளார். 


பகீர் தகவல்


அதன்படி, ”இளைஞர் ரூடி ஃபரியாஸின் தாயார் ஜானி சந்தனா. இவர் தனது மகன் காணவில்லை என்று தொடர்ந்து போலீசாரை ஏமாற்றி வந்துள்ளார். ஆனால் ரூடியை அவரது தாயார் ஜானி சந்தனா சுமார் 8 ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்து வந்துள்ளார். ரூடியின் தாயார், அவரை ரூடியின் தந்தை போன்று இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். ஒரு அடிமையாக இருந்து வந்துள்ளார் ரூடி. இது பற்றி வெளியே சொன்னால் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் மிரட்டியும் வந்துள்ளார் ஜானி சந்தனா.


மேலும், ரூடி ஃபரியாஸை,  அவரது தாயார் இரவு உறங்கும்போது, தனக்கு அருகில் படுக்க வைப்பதை வழக்கமான வைத்திருந்தார். அந்த நேரத்தில் கணவர் போன்று நடந்துகொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்திருக்கிறார். இது பிடிக்காமல், ரூடி ஃபரியாஸ் படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தாலும், தாயார் ஜானி சந்தனா, ரூடியை அழைத்து வந்து தன்னுடனே படுக்க வைத்து கொள்வார். குறிப்பாக ரூடிக்கு சில போதை மருந்துகளும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


போதை மருந்துகள்


மேலும், சொல்வதை சொல்வதை கேட்காமல் இருந்ததால், ரூடியை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாள்தோறும், ரூடியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற கொடுமைகளை சுமார் 8 ஆண்டுகள் ரூடி அனுபவித்து வந்துள்ளார். 


இதனை அடுத்து, நேற்று டெக்சாஸ் என்ற பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் ரூடி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயத்தை அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு, ரூடியை, தாய் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் தகவல்களை போலீசார் மறுத்துள்ளனர். இதற்கிடையில், இவ்வளவு கொடுமைகள் நடந்திருந்தாலும், தனது தாயார் சிறைக்கு செல்வதை ரூடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Crime: வழக்கு ஒன்றில் இன்று சாட்சி சொல்லவிருந்த நபர் நேற்று இரவு கொலை - நெல்லையில் பயங்கரம்