ஷாபாஸ் என்பவர் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மண்டவாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். காவல்துறையின் கூற்றுப்படி அந்த குழந்தை பள்ளிக்கு செல்லும் போது அவர் இந்த கொடூரமான குற்றத்தை செய்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியை பாழடைந்த கட்டிடத்திற்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. உயிர் பிழைத்த ஆறு வயது குழந்தை, வீடு திரும்பிய பிறகு, தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை என்னவென்றே தெரியாமல் சொல்லதெரியமல் சொல்லிக்கட்டி விவரித்ததாக பிஜ்னோர் எஸ்பி தரம்வீர் சிங் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்ஸோ சட்டத்திற்கு தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாபாஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த ஆறு வயது குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி கூறினார்.



நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் எவ்வளவு விழுப்புணர்வு ஏற்படுத்திய பின்பும் குறைந்த பாடில்லை, தினம் தினம் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள் வழக்குகள் வந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில் குற்றங்கள் நடை பெறுகின்றன. சமீபத்தில் கூட கேரளாவின் கழக்கூத்தத்தில் வசிக்கும் பெண் ஒருவர் 37 வயதான ‘காட்மேன்’ என்று7 சொல்லிக்கொள்பவர் மீது தன்னை பாலியல் ரீதியாகச் சீண்டியதாகவும், தனது நிர்வாணப் படங்களைக் எடுத்து செய்து பணம் மற்றும் தங்கத்தைப் பறித்ததாகவும் குற்றம் சாட்டினார். அவர் அளித்த புகாரின் பேரில், ஃபோர்ட் போலீஸார், திலீப்பை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த பெண், போலீசில் அளித்த புகாரில், திலீப் தனக்கு தூக்க மாத்திரைகள் கலந்த ‘பிரசாதம்’ கொடுத்ததாகவும், பின்னர் தனது நிர்வாண படங்களை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.



பின்னர் அந்த படங்களை பயன்படுத்தி அவளை பிளாக்மெயில் செய்துள்ளார். அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பணம் மற்றும் தங்கத்தை மிரட்டி பணம் பறித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனக்கு வேறொரு ஆணுடன் நிச்சயதார்த்தம் ஆன பிறகும், அவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் வன்கொடுமை செய்தது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இது போன்ற குற்றங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வந்து கொண்டிருந்தாலும் ப்ரத்யேகமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது மிக அதிகமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.