விழுப்புரத்தில் தெரு நாய்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் நரிக்குறவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், சாலாமேடு ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்த போது, 2 நாய்களை நரிக்குறவர் தனது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வாகனத்தில் எடுத்து சென்றது தெரிய வந்தது. பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலற்கு தகவல் தெரிவித்தனர்.


 


Journalist Thuglak Ramesh Interview: உதயநிதி என்ன MGR ஆ? எதற்கு இவ்வளவு புகழணும்?




 


பின்னர்  வி.மருதுார், கிராம நிர்வாக அலுவலர், உமாபதி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், துணை காவல் கண்காணிப்பாளர்  பழனிச்சாமி மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினர், அப்பகுதியில் உள்ள இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சாலாமேடு ஆற்காடு நகரைச் சேர்ந்த கனகராஜ், 51, என்பவர்  தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வருவதும், இந்த கோழிகளை தெருவில் சுற்றி திரியும் நாய்கள் கடித்ததால், ஆசாகுளத்தைச் சேர்ந்த நரிக்குறவர் ராஜ்குமார், 35, என்பவரை அழைத்து வந்து, நாட்டுத் துப்பாக்கியால் 2 தெரு நாய்களை சுட்டுக் கொன்று அப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது.


Kodanad Case : ஆஜரான MANAGER! கேட்கப்பட்ட 2 கேள்விகள்!


 




 


இதையடுத்து போலீசார், இருவரையும் ஆயுத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து, ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜ் குமாரின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மூலம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இறந்த நாய்களை கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 




மேலும் அனுமதியில்லாமல் ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி மறைத்து வைத்துக் கொண்டு வேட்டையாடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யப்படும் எனவும் இது போன்று தெரு நாய்களை வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை விரைவில் பறிமுதல் செய்யப்படும் என  தெரிவித்துள்ளார்.


 


Leopard CCTV Video: கிச்சனை சுற்றிப்பார்த்த சிறுத்தை -- வைரலாகும் வீடியோ