திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்தவர் நித்தியா. இவர் திமுக ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் வெற்றிச்செல்வன் இவர் கன்னியாபட்டியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் இவர் தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை குணசேகரன் பலமுறை கேட்டும் வெற்றிச்செல்வன் தரவில்லை, ஒரு கட்டத்தில் பணம் கேட்பவர்களை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை ஆதாரப்பூர்வமாக பதிவு செய்ய நினைத்த குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த வெற்றிச்செல்வன் கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்ட முயன்று இருக்கிறார். இதுகுறித்து இரு தரப்பினருக்கும் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன் அரிவாளால் வெட்ட துரத்தும் காட்சிகளை குணசேகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 






 




மேலும் திமுக கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன்  கடன் கொடுத்தவரை அரிவாளால் வெட்ட துரத்திய சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைய தலகளில் வைரலாகி வருகிறது.