திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ), மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக மூழ்கி இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
இதனை தொடர்ந்து கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற நித்யா அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை அவர் வேலை பார்க்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் வீடு உன தேடி வந்தார். ஆனால் நித்யா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து புஷ்பராஜூக்கு நள்ளிரவில் அழைப்பு வந்தது. உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார். பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில், மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் நண்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்