விழுப்புரம்: விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரப்பட்டு மூர்த்தி (42), வெங்கனூர் மோகன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருந்த போதும் ராஜா தற்கொலைக்கு இழப்பீடு கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராஜாவின் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.


தற்கொலை முயற்சி:


விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரை சேர்ந்த கனகராஜ் மகன் பிரதீப்ராஜ் என்கிற அனன்யா (வயது 19). திருநங்கையான இவரை சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா (வயது 22) என்பவர் காதலித்து வந்ததாகவும் இதனை அறிந்த அவரை தந்தை மரியநாதன் மேற்படி ராஜாவை அசிங்கமாக திட்டி, அடித்ததால் மன உளைச்சலில் கடந்த 23-ந் தேதி மாலை 6 மணிக்கு அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


இதனால் மனமுடைந்த திருநங்கை அனன்யா என்பவர் நேற்று காலை 10:30 மணிக்கு மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் அனன்யா ராஜாவை திருமணம் செய்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி உள்ளார்.


இறந்த ராஜாவின் பெற்றோர் இவர்களது திருமணத்தை மறுத்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராஜா வீட்டுக்கு வந்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டு வந்தவர்களை அசிங்கப்படுத்தி அனுப்பி உள்ளனர். ராஜாவிற்கு சேலம் பகுதியில் உள்ள திருநங்கைகளுடன் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2 மாதத்திற்கு முன்னா் ராஜாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். அனன்யாவை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அனன்யா மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுய நினைவிற்கு வந்த பிறகு இவ்வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.