தாம்பரத்தில் பிள்ளைக்கு பாரமாக இருக்ககூடாது என எண்ணி வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்ய சேலையூர் ராஜா ஐயர் முதல் தெருவில் வசித்து வருபவர் ஆனந்தன் (72), இவரது மனைவி கங்காதேவி(62), இருவரும் மதுரையை சேர்ந்தவர்கள்.




இவர்களுக்கு ஜெயக்குமார்(32), என்ற மகன் உள்ளார். மகனுக்கும் திருமணமாகி அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், தந்தைக்கு கண்ணில் குளுக்கோமா என்ற வியாதி வந்து கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. தாய்க்கும் முடக்குவாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.




இருப்பினும் தாய் தந்தையரை கண்ணும் கருத்துமாக மகன் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு பாரமாக இருக்கக்கூடாது என எண்ணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயது முதிர்வு, உடல் நிலை சரியில்லாமல் தங்களது வாழ்க்கையை முடித்து கொண்ட சமபவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


 




 


 


Neet Suicide : பிலிப்பைன்ஸில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.. நீட் தேர்வில் தோல்வி.. திருவள்ளூர் மாணவி தற்கொலை..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர