தனியார் பள்ளியில் போக்குவரத்து குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணிந்து வந்தால் உங்களுக்கு தக்காளி வழங்குகிறேன் என போக்குவரத்து உதவி ஆய்வாளர் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

 

மறைமலைநகர்  ( Maraimalai Nagar ) : சென்னை புறநகர் பகுதியான மறைமலைநகர் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியில் தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி அவர்கள் சக காவலர்களுடன் பள்ளிக்குச் சென்று ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை பெற்றோர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

ஒரு வாரத்திற்கு 1 கிலோ தக்காளி இலவசம் 

 

அவ்வப்போது பேசுகையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாமல், பயணம் மேற்கொள்வதால் இந்த விபத்து ஏற்படுகிறது. எனவும், நீங்கள் இருசக்கர வாகனத்தில் இருவர் வரும்போது இருவருமே தலைக்கவசம் அணிந்து வந்தால், அடுத்தஒரு வாரத்திற்கு 1 கிலோ தக்காளியை இலவசமாக தருவதாக கூறினார் அல்லது ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்குவதாக தெரிவித்தார். மறைமலைநகர் அருகே நடைபெற்ற நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனசேகர், சிவப்பு தங்க ரதக் கொடையாளர் அமைப்பின் நிறுவனர் முருகன், உள்ளிட்டார் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை பெற்றோர்கள் முன் எடுத்து கூறினர்.



தொடர்ந்து தக்காளி விலை ஏறி வரும் இந்த சமயத்தில்,  ஹெல்மெட் அணிந்து வந்தால் தக்காளி கொடுப்போம் என  போக்குவரத்து காவல் உதவியாளர் பேசியதை கேட்ட அங்கு இருந்த பொதுமக்கள்  சிரிப்பலையில் மூழ்கினர். போக்குவரத்து காவல் உதவியாளரின் பேச்சை கேட்ட சில   பொதுமக்களோ,  தக்காளி விலையை விட நமது உயிரின்  விலை மதிப்பற்றது.  எனவே போக்குவரத்து  விதிமுறைகளை  காவல்துறையினர் கூறுவதைப் போல் கடைபிடிக்க வேண்டும் என  தெரிவித்தனர்

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண