திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த முருகேசன் வயது (55). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். முருகேசனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி சென்னையில் உள்ள மகன்களின் வீட்டில் வசித்து வந்தார். முருகேஷனுடன் இரண்டாவது மனைவி கிராமதில் வசித்து வந்தார். இந்த நிலையில் முதல் மனைவி 2 வருடத்திற்கு முன்பு உயிரிழந்து விட்டார். இரண்டாவது மனைவி 4 மாதத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். முதல் மனைவிக்கு 3 ஆண்மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் கடைசி மகன் சென்னையில் இருந்து கடந்த 3 மதத்திற்கு முன்பு தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது மகனும் மருமகளும் 3 வயது மகளை தாத்தா முருகேசனிடம் கொடுத்து விட்டு வந்தவாசிக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். வந்தவாசிக்கு சென்ற சிறுமியின் தந்தை தாய் இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது சிறுமி அழுத படியும் சிறுமியின் உடல் சோர்ந்து காணப்பட்டும் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. உடனடியாக சிறுமி மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் மருத்துவ நிர்வாகத்தின் மூலம் மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்போது இந்த சம்பவத்தில் நாம் மாட்டி கொள்வோமோ தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் முருகேசன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் முருகேசனை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில் வந்தவாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகேசன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவு ஆனார்.
அதனை தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில் சிறுமியின் தாய் வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முருகேசன் மழையனுர் கூட்ரோடில் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் காவல்நிலைய ஆய்வாளர் காந்திமதி துணை ஆய்வாளர் சாந்தி மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்றனர். காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்ற முருகேசனை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்துபட்ட முருகேசனை வந்தவாசி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முருகேசனை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.
புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம் 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.