திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதி வானவில் நகரில் வசிப்பவர் சௌந்தர்ராஜன், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மின்சாரத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தினந்தோறும் திருவண்ணாமலை ஈசான்ய லிங்கத்தை தரிசனம் செய்ய சென்று வருவார். அப்போது சௌந்தர்ராஜனுக்கும், சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த சுபாஷ்  என்பவருக்கும் அறிமுகம் ஆகியுள்ளார். சுபாஷ் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என சௌந்தர்ராஜனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் இருவரும் அடிக்கடி தொலைபேசியிலும் பேசி வந்துள்ளனர். அப்போது சௌந்தர்ராஜன் தன்னுடைய மனைவி சென்னையில் பணியாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். அப்போது சுபாஷ் உங்களுடைய மனைவிக்கு பணி மாறுதல் பெற்றுதருவதாக சுபாஷ் கூறியுள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் எந்தவிதமான பரிந்துரையும் இன்றி சௌந்தர்ராஜன் மனைவிக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று இங்கு வந்துள்ளார். 




 


இதுகுறித்து சுபாஷிடம் கூறியுள்ளார். அதற்கு சுபாஷ் தன்னால் தான் பணி மாறுதல் கிடைத்தது எனக் கூறி சௌந்தர்ராஜனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு சௌந்தர்ராஜன் தன்னுடைய மனைவிக்கு தானகதான் பணிமாறுதல் கிடைத்துள்ளது அதனால் பணம் தரமுடியாது என கூறியுள்ளார். அதற்கு சுபாஷ் சௌந்தர்ராஜனை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலைக்கு வந்த சுபாஷ் பணம் கேட்டு சௌந்தர்ராஜனை  தாக்கியுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சௌந்தர்ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் வயது (29) கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சுபாஷ் மீது மதுரவாயில், சிந்தாதிரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி பணமோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. மேலும் சுபாஷை சென்னை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 




 


மேலும் சுபாஷிடம் ஐ.ஏ.எஸ்., ஆர்.டி.ஓ., முதன்மை செயலாளர் என பல்வேறு அரசு பதவிகளுக்கான அரசு சின்னத்துடன் கூடிய போலி அடையாள அட்டைகள் இருந்ததாகவும், தன்னை அரசு அதிகாரி என கூறிவேலை வாங்கி தருவதாகவும், பல்வேறு பிரச்சனை முடித்து வைப்பதாகவும் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.  மின்சார துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரை பணம் கேட்டு தாக்கிய வழக்கில் போலி ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி தெரிவிக்க   நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்