திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மாமன் மகன் முருகன். இவர்கள் இருவரும் நேற்று இரவு திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் செம்மண் குட்டை அருகே இரவு சென்றுள்ளனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் மற்றும் காளிதாஸ் இவர்கள் இருவரும் மங்கலம் கிராமத்தில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்ப்பதற்காக தங்களுக்கு சொந்தமான பல்சர் பைக்கில் செம்மண் குட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்பொழுது எதிரே வந்து கொண்டிருந்த ரமேஷின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் வேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
ICC: அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு கட்டாயம்; விதிமுறைகள் வெளியீடு- என்னென்ன?
ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
பைக் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி ஒருவர் கவலைக்கிடம்
இரவு நேரத்தில் இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கிளியாபட்டு கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த முருகன் மற்றும் காளிதாஸ் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முருகன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காளிதாஸ் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வந்தவாசியில் பைக் நேருக்கு நேர் மோதி 3 இளைஞர் பரிதாப பலி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமரன் மகன் ஆகாஷ் வயது (22). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வெண்குன்றம் அருகே சென்றபோது, எதிரே வந்தவாசி நோக்கி வந்த ஆகாஷ் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்குநேர் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்தில் சிக்கிய மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரட்டைவாடை செட்டி தெருவை சேர்ந்த மெக்கானிக் விஜயன் வயது (33), அவருடன் வந்த சென்ட்ரிங் தொழிலாளி சிவா வயது (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியிலேயே அடுத்தடுத்து இருவரும் இறந்தனர். இதுகுறித்து வந்தவாசி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இருசக்கர வாகன விபத்து சம்பவம் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தால் திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.