திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர வெற்றிலை காரத்தெருவில் வசிப்பவர் பிரகாஷ் வயது (42). இவர் ஆட்டோ ஓட்டுனர். பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டும் இவர், இரவு நேரத்தில் வீடுகளின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.  அதன்படி நேற்று முன்தினம் இரவு ஆரணியில் இருந்து வடுக சாத்துர் கிராமத்துக்கு சவாரி சென்றுள்ளார். அங்கு பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அந்த கிராமத்தில் ஆட்டோவில் சுற்றி பார்த்துள்ளார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தையம், வீட்டில் ஆட்கள் இல்லாததையும் அறிந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் உடனடியாக அருகில் இருந்த  வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டின் அறையில் இருந்த  பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள்  மற்றும்  ரூபாய் நோட்டுகள்  ஆகியவற்றை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது பாபுவின் வீட்டில் இருந்து யாரோ வருகிறார் என்பதனை அப்பகுதி மக்கள் யார் நீ இங்கு ஏன் வந்தாய் என கேட்டுள்ளார்.  அதற்கு நான் ஆட்டோ ஓட்டுநர் சவாரிக்காக வந்தேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சட்டென்று புறப்பட்டு சென்றுள்ளார்.


அதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த மக்கள், பாபு வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் அறையில் இருந்த  பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் பீரோவை  பாபு சோதனை செய்ததில் அதில் வைத்திருந்த இரண்டு பவுன் மற்றும் ரொக்கம் பத்தாயிரம் திருடுபட்டதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் பாபு புகார் கொடுத்தார். இந்த புகாரின்  பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷை கைது செய்தனர். பிறகு ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.


இதுகுறித்து ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது; வாணியம்பாடியை சேர்ந்த பிரகாஷ் அங்கு திருட்டு செயல்களில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த பிரகாஷ் அந்த ஊரில் வாழ அசிங்கப்பட்டு தனது மாமியார் ஊரான ஆரணிக்கு வந்துள்ளார். இங்கு பட்ட பகலில் ஆட்டோ ஓட்டிய பிரகாஷ் இரவு நேரத்தில்  திருட்டு வழிபறி போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது களம்பூர், பள்ளி கொண்டா, வாணியம்பாடி ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது அதனை  காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.