Crime: ஆரணி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய 3 பேர் கைது

புகையிலை மற்றும் குட்காவை கடத்திய வெளிமாநிலத்தை சேந்தவர் உட்பட 3 நபர்கள் கைது.

Continues below advertisement

ஆரணி அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்காவை கடத்திய வெளிமாநிலத்தை சேந்தவர் உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்டு, மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் புங்கம்பாடி செல்லும் சாலையில் மளிகை கடை வைத்திருப்பவர் நடராஜர் வயது (51). இவர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை  தனது கடையில் மறைத்து வைத்து சட்ட விரோதமாக  விற்பனை செய்து வந்தார். இதுதொடர்பாக நடராஜனை ஆரணி நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் போதைப் பொருள்கள் விற்பனை  தொடர்பாக அவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமின்றி  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இவரது மளிகை கடைக்கு சீல் வைத்தனர். அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அபராதம் செலுத்திவிட்டு நடராஜன் மீண்டும் கடையை திறந்தார். இந்த நிலையில் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்கணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,


போலீசார் 12 மூட்டை குட்கா பறிமுதல் 

ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவி சந்திரன் உத்தரவின் பேரில் ஆரணி நகர ஆய்வாளர் விநாயகமூர்த்தி, துணை ஆய்வாளர்  சுந்தரேசன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் அதிகாலை 4 மணிக்கு மலையம்பட்டு கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை வழிமடக்கி  சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 12 மூட்டைகள்  இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆட்டோவுடன்  காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரிடம்  விசாரணை நடத்தியதில் நடராஜனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.


குட்கா கடத்திய மூன்று பேர் கைது 

மேலும் ஆரணி நகர மோகன் தெருவில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேவாரம் வயது (26) என்பவர் மூலமாக போதைப் பொருட்கள் பெற்று வந்ததும் பெங்களூரைச் சேர்ந்த பக்காரம் என்பவர் தேவாரத்திற்கு போதை பொருளை சப்ளை செய்ததும் தெரிய வந்தது.  இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போதைப் பொருட்கள் கடத்த பயன்படுத்திய மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டோ மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மளிகை கடைகாரர் நடராஜன் ஆட்டோ டிரைவர் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக  இருந்த போதை  பொருட்கள் கடத்திய தேவாரம் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் பக்காரம் என்பவரை காவல் துறையினர் தேடி வருகிறனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola