திருவண்ணாமலையில் கடந்த சனிக்கிழமை இரவு நான்கு ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளையர்களின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம்களில் 72 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் அருகில் நின்று ஆள் நடமாட்டத்தை கண்காணிக்கும் மேலும் ஒரு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


அந்த வீடியோவில், தண்டராம்பட்டு சாலை தேனி மலை பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் முன்பு டாட்டா சுமோ வாகனம் நிற்கிறது. வாகனத்தில் இருந்து ஒருவர் மட்டும் இறங்கி நோட்டமிடும் காட்சி பதிவாகியுள்ளது.


அந்த நபர் முகமூடி அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தும்போது கொள்ளையர்கள் அனைவரும் முகமூடி அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


சிசிடிவி கேமரா பதிவில் அதிகாலை 1. 17 மணி என பதிவாகியுள்ளது. வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப்பட்ட முதல் ஏடிஎம் இது. அதிகபட்சமாக 32 லட்சம் ரூபாய் இந்த ஏடிஎம்மில் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதும், இந்த ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளையர்களின் தடயவியல் ஆதாரங்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர