வாட்ஸ்அப்பில் கிடைக்கும் ஸ்டிக்கர்கள் எனப்படும் அம்சம், சில சிறப்பான சந்தர்ப்பங்களில் வாழ்த்துக்களையும் பதில் மெசேஜ்களையும் அனுப்ப பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதே போல இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதற்கும் அழகான ஸ்டிக்கர்கள் நம் மனதிற்கு பிடித்தவர்களுக்கு அனுப்பி மகிழ நிறைய உள்ளன.
மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இதனை பயன்படுத்துகின்றனர். இந்த அபிமான ஸ்டிக்கர்களுடன் உங்கள் காதலர் தினத்தை கொண்டாடுவது எப்படி? நமது மொபைலில் காதலர் தின ஸ்டிக்கர்களை எவ்வாறு பெறுவது என்று நீங்கள் யோசித்தால், அதற்கான வழி இதோ! காதலர் தின ஸ்டிக்கர் பேக்குகளைப் பெற ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் போன்கள் இரண்டிற்கும் படிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன பார்த்து பயன்பெறவும்.
ஆண்ட்ராய்டில் காதலர் தின ஸ்டிக்கர்களைப் பெறுவது எப்படி:
படி 1: மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும், காதலர் தின ஸ்டிக்கர்களை அனுப்ப விரும்பும் சாட்டை திறக்கவும். அதில் இருக்கும் இருக்கும் ஸ்மைலி ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 2: அதில் GIF பட்டனுக்கு அடுத்ததாக ஸ்டிக்கர்கள் ஐகானைக் காணலாம்.
படி 3: அந்த ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம், உங்களின் ஆப்பில் பதிவிறக்கப் பட்டுள்ள எல்லா ஸ்டிக்கர்களையும் அணுக முடியும்.
படி 4: அந்த சேகரிப்பில் மேலும் ஸ்டிக்கர்களைச் சேர்க்க விரும்பினால் கீழே சென்று. 'Get More Stickers(மேலும் ஸ்டிக்கர்களைப் பெறுங்கள்)' என்பதைக் கிளிக் செய்யவும். இது உங்களை கூகுள் ப்ளே ஸ்டோருக்கு அனுப்பும்.
படி 5: அதிலிருந்து நீங்கள் விரும்பும் எந்த ஸ்டிக்கர் ஆப்பையும் பதிவிறக்கம் செய்யலாம். இன்ஸ்டாலேக்ஷன் முடிந்ததும், அந்த ஆப்பை திறந்து, உங்களுக்கு தேவையான ஸ்டிக்கர் பேக்குகளை தேர்ந்தெடுத்து 'add to whatsapp' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: இந்த செயல்முறை முடிந்ததும், வாட்ஸ்அப்பில் நீங்கள் தேர்வு செய்த காதலர் தின ஸ்டிக்கர்கள் இருக்கும், அவற்றை மற்றவர்களுக்கு எளிதாக அனுப்பலாம்.
iOS இல் காதலர் தின ஸ்டிக்கர்களைப் பெறுவது எப்படி:
படி 1: iOS பயனர்கள் மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஆப்ஸை ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும். Sticker.ly, Sticker Maker + Stickers, Stickles மற்றும் Wsticker ஆகியவை ஆப்கள் உள்ளன. இந்தப் பயன்பாடுகள் இலவசமாகக் கிடைக்கின்றன, மேலும் காதலர் தின தீம் உள்ளிட்ட பலவிதமான ஸ்டிக்கர்களையும் வழங்குகின்றன.
படி 2: மற்றொரு வழி என்னவென்றால், உங்களுக்கு யாராவது காதலர் தின ஸ்டிக்கரைப் அனுப்பினால், அவற்றை உங்கள் 'Favourites' இல் சேர்க்கவும். அதில் சேர்க்க, ஸ்டிக்கரை லாங் பிரெஸ் செய்தால் வரும் பாப் அப்பில், 'ஸ்டார்' விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
படி 3: இப்போது, டெக்ஸ்ட் பாரில் வைக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களில் என்ன வேண்டுமோ எடுத்து உங்கள் கான்டாக்ட்டில் இருப்பவர்களுக்கு அனுப்பலாம்.