திருப்பத்தூர்: மிட்டூர் பகுதியில் அடுத்தடுத்து நான்கு கடையில் தொடர் திருட்டு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம், மிட்டூர் பகுதியில் நேற்று இரவு 2 மணி அளவில் தொடர்ந்து நான்கு கடைகளில் மர்ம நபர்கள் ரூபாய் 50,000 க்கும் மேலான பணம் மற்றும் 20000 மதிப்புள்ள மளிகை பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 

மிட்டூர் பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் சக்திவேல் 8 வருடங்களாக சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நள்ளிரவு நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டின் பின்புறமாக கதவை உடைத்து விட்டு 15,000 மதிப்புள்ள கேமரா ஆர்டிஸ்க் மற்றும் கல்லாவில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் மற்றும் 15,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

Continues below advertisement

அதே போன்று மிட்டுர் பகுதியைச் சார்ந்த முன்னாள் ராணுவ வீரர் முனுசாமி மகன் வேலு எட்டு வருடங்களாக ஜோதி விநாயக சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அவர் கடையில் 7000 மதிப்பிலான கேமரா ஆர்டிஸ்க் மற்றும் கல்லாவில் இருந்த 2000 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

அதே போன்று ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியைச் சார்ந்த பெருமாள் மகன் சத்யராஜ் என்பவர் மிட்டூர் பகுதியில் பட்டாசு கடை, ஹார்டுவேர், புட்வேர் என  மூன்று கடைகளை நடத்தி வருகிறார். 

அவரது மூன்று கடைகளை உடைத்து ரூபாய் 20000 பணத்தையும் விலை உயர்ந்த செருப்புகளையும் திருடிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி மங்க்கி குல்லா போட்ட மர்ம நபர்களை சிசிடிவி காட்சி வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருட்டு சம்பவம் மிட்டூர் பகுதியில் அரங்கேறி வருகிறது எனவும் தெரிவிக்கிறார்கள் ஒரு வாரத்திற்கு முன்பாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் மற்றும் கணினி சம்பந்தமான அனைத்து பொருட்களையும் மர்ம நபர்கள் திருடியுள்ளனர் அதன் பின்பு அருகாமையில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடி சென்றுள்ளனர். 

மிட்டூர் பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது இதனால் எங்களால் வெளியே வருவதற்கும் பயமாக உள்ளது என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக பிடித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.