திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலி பேச மறுத்ததால் உல்லாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்வேன் என மிரட்டிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் மதி (வயது 38) என்பவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மனைவி கணவனை விட்டு 7 மாதமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த நசிபா(வயது 30) என்பவருக்கும் மதிக்கும் 10 வருடமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருவரும் இருந்து வந்துள்ளனர்.

Continues below advertisement

இதனிடையே, நசிபா கள்ளக்காதலன் மதியிடம் மூன்று மாத காலமாக பேசாமல் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த மதி, “நீ என் கூட பேசவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்” என தோக்கியம் பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்துள்ளார். 

பின்னர் நசிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மதி நீ என் கூட பேசவில்லை என்றால் நாம் தனிமையில் ஒன்றாக இருந்த புகைப்படம், வீடியோவையும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்  உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த நசிபா கந்திலி காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மதி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கள்ளக்காதலி கள்ளக்காதலுடன் பேச மறுத்ததால் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில்  பதிவு செய்வேன் என மிரட்டி கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.