ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 மாத பெண் குழந்தை உயிரிழந்தாக மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தீவிர விசாரணையில் 2 ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், அதனை கவனிக்கமுடியாமல் மன உளைச்சலில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்றதாக தாய் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பெத்தலேகம் பகுதியில் உள்ள இ.பி.லைன் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மேல்தளத்தில் வசித்து வருபவர் அக்பர் பாஷா - ஆஸ்லியா தஸ்லீம் தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில், ஹர்பா பாத்திமா என்ற 3 மாத பெண் குழந்தையும் இருந்தது.
இந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஹர்ஃபா பாத்திமா வாடகை வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாக குழந்தையின் உறவினர்கள் குழந்தையை, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் மேல்மாடியில் வசிக்கும் குழந்தை, நடக்க கூட முடியாத குழந்தை, தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்தது என சந்தேகித்தின் பேரில் குழந்தையின் உடலை மீட்டு ஆம்பூர் நகர காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனஉளைச்சலில் இருந்த தாய்
இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, நடக்க கூட முடியாத குழந்தை எப்படி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது?, குழந்தையின் பெற்றோரே குழந்தையை கொன்று விட்டு நாடகமாடுகிறார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
அக்பர் பாஷா - ஆஸ்லியா தஸ்லீம் தம்பத்தியினருக்கு, ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இவர்களுக்கு 3 ஆவதாக ஹர்ஃபா பாத்திமா என்ற 3 மாத குழந்தை பிறந்துள்ளது. 3 ஆவது முறையாக கர்ப்பம் தரிக்கும் போதே குழந்தை வேண்டாம் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், 3 ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், மன உளைச்சலில் இருந்த ஆஸ்லியா தஸ்லீம், குழந்தை ஹர்ஃபா பாத்திமாவை கீழ் தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு, குழந்தை தவறி விழுந்துள்ளதாக கூறியதாக காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, ஆஸ்லியா தஸ்லீம் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெற்ற தாயே குழந்தையை தனது குழ்ந்தையை கொன்ற சம்பவம் ஆம்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.