அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.


பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விசாரணை கைதிகள் 10 பேரை கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களை பிடுங்கி அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்  மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க தம்ழிநாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


பல்வீர் சிங் மீது குற்றசாட்டு என்ன நடந்து?


அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய காவல்துறை அதிகாரி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி, வி.கே. புரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை கொடூரமாகப் பிடுங்கியதாக பாதிகப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இந்த சமபவம் தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளானது. விசாரணை கைதிகளின் வாயில் ஜல்லி கற்களை போட்டு பல்லை உடைத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.


இதையெடுத்து, நெல்லை ஆட்சியர் உத்தரவின் பேரில், சேரன்மகாதேவி, சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டனர். துன்புறுத்தலுக்குள்ளான  செல்லப்பா, இசக்கிமுத்து, ரூபன் அந்தோணி, மாரியப்பன் மற்றொரு மாரியப்பன், சூர்யா, லட்சுமி சங்கர், வேத நாராயணன் மற்றும் சுபாஷ் ஆகிய 9 பேரும் இது தொடர்பாக இதுவரை சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 


பல்வீர் சிங் பணியிடை நீக்கம்:


 இந்த சமபவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட  பல்வீரசிங், 15.காட்ட அவர்கள் 28.03.2023 அன்று பணியிடை நீக்கம். செய்யப்பட்டார், அம்பாசமுத்திரம் காவய் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த முதல்நிலைக் காவலர்ராஜ்குமார், , கல்லிடைக்குறிச்சி காவல்ர் போகபூமன், வி.கே. நகர் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், பி.ராஜகுமாரி, கல்மிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர் ஏ.பெருமாள், வி.கே.புரம் வட்டக் காலல் ஆய்வாளர், என்.சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்-ஆய்வாளர், எம்.சந்தானருமார். வி.மணிகண்டன், ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


அதோடு, புகார்கள் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி,, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு. தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையிளை நிருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடந்த 3 ஆம் தேதி சமர்ப்பித்துள்ளார்.


அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ன வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணை உத்திரவிடப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரயினை ஏற்று திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங், மீதும் மற்ற காவல் நுரையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான மிசாரணை மேற்கொள்ள  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா  உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாதி காலத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.