டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் டிப்டாப் குறையாமல் டக் டக் என வீடியோ வெளியிட்டு இம்சித்து வருபவர்களில், தேனி நாகலாபுரம் சுகந்திக்கு தனி இடம். சுகந்தியின் சுகந்தமான வீடியோக்கள் பேஸ்புக், யூடியூப்பில் வெளியாகி இளசுகளை சூடேற்றும். ஆபாசமும், ஆவேசமுமாய் சுகந்தி வெளியிடும் வீடியோக்களை கண் சிமிட்டாமல் பார்ப்பவர்களும் உண்டு, கன்னா பின்னாவென்று திட்டுபவர்களும் உண்டு. 




ஆளுக்கு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் தங்கள் அலப்பறைகளை பதிவிடும் இந்த புதிய பார்முலாவில் சுகந்தியின் சேனலும் ஒன்று. இதில் சிறப்பு என்னவென்றால் வம்பிழுப்பதில் இருந்து வாயாடுவதை வரை அனைத்துமே ஒரே தளத்தின் கீழ் தருவது தான். இதனால் சிலாகிப்புகளை விட சிராய்ப்புகள் தான் அதிகம் என்றாலும், அதையும் பொருட்படுத்தாமல் வழக்குகளை வாழை மீனாகவும், வாய்தாக்களை வஞ்சிரம் மீனாகவும் ருசித்து சென்ற சுகந்தி, இப்போது தூண்டிலில் சிக்கிய கெளுத்தி மீனாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம் என்ன....


விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா ஆலங்குளம் வசந்தம் நகர் சாந்தி இல்லத்தில் வசித்த பெண் ஒருவர், வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் செல்வா என்பவரிடம்  பேசிய ஆடியோவை, ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்ததாக ஒரு பிரச்சினை வெடித்து, அதனால் சம்மந்தப்பட்ட பெண் அவரது கணவரை பிரிந்துள்ளார். பிரிவால், கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் 2021 ஜூன் மதுரை மதுரை மாவட்டம் ய.ஒத்தக்கடை அன்னை  நகர் உள்ள ஐயப்பன் நகர் முதல் தெருவில் தனது தோழியான கண்ணகியின் வாடகை வீட்டில் தனது இளைய மகளுடன் வசித்து வந்துள்ளார். 


அப்போது அந்த பெண்ணின் போட்டோவையும், அவரது கணவர் போட்டோவையும் பயன்படுத்தி ஆபாச காட்சிகளாக சித்தரித்து சுகந்தி யூடியூப்பில் ஒளிபரப்பியதாக புகார். கவிதா என்ற ராமதாஸ் என்பவரும் அதற்கு உதவியுள்ளார்.  இதனால் மனம் உடைந்த அந்த பெண், மதுரை யானைமலை ஒத்தக்கடை மற்றும் மதுரை எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளார், தன்னைப் போலவே பல பெண்களை பற்றி ஆபாச பதிவு செய்து, அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் அவரின் புகாரில் இருந்தது. தன்னை ஆபாசமாக சித்தரித்த Madurai silver official ( ஈரோடு கேப்டன்) suganthi  official bala bala. ஆகிய YouTube channel நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுரை மாவட்டம் ஒத்தகடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. 



 இந்த நிலையில் மேற்படி வழக்கு சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின் பிரகாரம் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மறு வழக்கு (re-registered) பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்தது. புலன் விசாரணை மேற்கொண்டதில் நேராக தேனி புறப்பட்ட போலீசார், வீட்டு வாசலில் வைத்து சுகந்தியை(30) கைது செய்தனர். விசாரணைக்குப் பின் சுகந்தி, சிறையில் அடைக்கப்பட்டார். 


சமூக வலைத்தளங்களில் இது போன்று பிறர் மனம் புண்படும் படியாக பதிவுகளை பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.