காரைக்காலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி முகத்தில் துணியை கட்டி நகை திருட முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் விசாலாட்சி என்கின்ற மூதாட்டி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு வயதானவரும், ஒரு பெண்ணும் சென்று வீடு காலியாக உள்ளதா என விசாரித்துள்ளனர். மூதாட்டி இல்லை என கூறியதும், அங்கிருந்து கிளம்பி, அதே பகுதியின் மற்றொரு மூலையில் நின்றுகொண்யிடிருந்த அந்தப்பெண்ணின் கணவருக்கு மூதாட்டி வீட்டில் தனியாக உள்ளார். வேறு யாரும் இல்லை. மூதாட்டி கழுத்தில் தங்க நகை உள்ளது என கூறிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.



 

இதனை அடுத்து, சிறிது நேரத்தில் 3வது மர்மநபர் மூதாட்டி வீட்டில் திடீரென நுழைந்து மூதாட்டி முகத்தில் துணியை கட்டி அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை அறுக்க முயற்சித்துள்ளார். அப்போது மூதாட்டி சத்தம் போடவே தெருவாசிகள் கூடியபோது மர்ம நபர் தப்பியோடிவிட்டார். இது குறித்து மூதாட்டி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை 3 பேரையும் தேடிவந்தனர். இந்த நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காரைக்கால் நேருநகர் பகுதியில் நகர போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த 3 பேர் சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் சுற்றி திரிந்ததை பார்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் வேறு வீட்டில் கொள்ளையடிக்க நோட்டம் விட்டதை உணர்ந்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

 

காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன்(62), இவரது மகள் சங்கீதா(28), சங்கீதாவின் கணவர் சசிகுமார்(32) ஆகியோர் என்று தெரிய வந்தது. இதனை அடுத்து இவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு இதே போல் பல்வேறு பகுதிகளில் வழக்கு உள்ளது என்பது காரைக்கால் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.