திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த அன்னசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செம்பருத்தி (வயது 25). இவரும், வெள்ளைச்சாமி என்பவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் வேலைக்கு செல்வதாக கூறிய நிலையில், தீபாவளி முடிந்த பின் வேலைக்கு செல்லுங்கள் என்று செம்பருத்தி கூறியுள்ளார். ஆனால் அதையும் மீறி வெள்ளைச்சாமி வேலைக்கு சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்த செம்பருத்தி விஷ விதை தின்று வீட்டில் மயங்கினார். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




இதேபோல் திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் ஏ.டி.எம். எந்திர டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர், இரவில் வீட்டில் தூக்கிட்டு கொண்டார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிலம்பரசனின் மனைவி செந்தமிழ்செல்வி (31) கொடுத்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




இதேபோல் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலையில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம், டவுன் ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள ரெயில் பாதையில் சென்றபோது, திடீரென்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் சிவப்பு நிற டி சர்ட்டும், பச்சை நிற வேட்டியும் அணிந்திருந்தார். வலது கையில் என்.எஸ் என்று பச்சை குத்தி உள்ளார். மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் எனவும் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.