கரூர் பசுபதி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற ஜெகதாபியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பர்முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 



இதேபோல் கரூர் தாந்தோணிமலை பகுதியில் கஞ்சா விற்ற காந்தி கிராமத்தை சேர்ந்த சேகர் (32), ரங்கநாதன் பேட்டையை சேர்ந்த ரவி (47) ஆகிய 2 பேரை தாந்தோணி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி சேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய கார், 2 செல்போன் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பசுபதி பாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.