பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று குற்றவாளிகளை சினிமா பாணியில் விரட்டிச் சென்று அரவக்குறிச்சி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.




மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் செயின் பறிப்பு, வாகனம், திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தஞ்சை மாவட்டத்தை ரவி (20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (26), திண்டுக்கல் மாவட்ட சேர்ந்த தாலிக்ராஜ் (28). இந்த மூன்று நபர்களும் திருட்டு, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மூன்று நபர்களையும் மதுரை போலீசார் தேடி வரும் நிலையில், இவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பதாக மதுரை காவல்துறை சார்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.


 




கரூர் நகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கரூர் பசுபதிபாளையம் பகுதியில் மூவரையும் பார்த்த போலீசார் அவர்களை விரட்ட தொடங்கினர். அப்போது மூவரும் இருசக்கர வாகனத்தின் மூலம் கரூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி நோக்கி வேகமாக சென்றுள்ளனர். 


சினிமா பாணியில் துரத்தல்


அதனை நோட்டமிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தடாக்கோவில் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகளை சினிமா பாணியில் துரத்தி சென்றனர். மூன்று நபர்களையும் தடா கோயில் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையில் பாதுகாப்பில் இருந்த போலீசார் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து கத்தி, செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




 


செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு என பல குற்ற சம்பவங்களை ஈடுபட்ட மூன்று நபர்களை சினிமா பாணியில் அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில் போலீசார் துரத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் இருந்ததால் அதனை வைத்து போலீசார் மூவரையும் பிடித்துள்ளனர்.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial