BMW M 1000 XR: பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் M 1000 XR மாடலின் விலை இந்திய சந்தையில், 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக நிர்ணயீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 


பிஎம்டபள்யூ மோட்டார்சைக்கிள்:


BMW Motorrad நிறுவனம் நடப்பாண்டில் M சீரிஸில் மூன்றாவது மாடலாக M 1000 XR என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை அமெரிக்காவில் 24,295 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில்  ரூ. 20.22 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும்போது, ஏற்றுமதி கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து இதன் விலை 25 லட்சம் வரையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய டிராக்-ஃபோகஸ்டு அட்வென்சர் மாடல் வாகனமாட்க்ஹு, லிட்டர்-கிளாஸ் பிரிவில் சமீபத்தில் வெளியான Ducati Multistrada V4 RS-க்கு போட்டியாக உள்ளது.


இன்ஜின் விவரம்:


M 1000 XR ஆனது ShiftCam தொழில்நுட்பத்துடன் கூடிய 999cc, திரவ-குளிரூட்டப்பட்ட, இன்லைன்-ஃபோர் மோட்டார் மூலம் இயங்குகிறது. இது அதிகபட்சமாக 201hp ஆற்றலையும் 112Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இது முந்தைய எஸ் மாடலை விட அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது. வேகமான ஆக்சிலரேஷனுக்கான நான்காவது மற்றும் ஆறாவது கியரின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது எஸ் மாடலில்  உள்ள ஸ்ப்ராக்கெட்டில் 47வது  பல்லில் இருந்த இருந்த இந்த கியர் தற்போது 45வது பல்லிற்கு மாற்றப்பட்டுள்ளது.


வடிவமைப்பு விவரங்கள்:


ரைடரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக M 1000 XR இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன், டூயல்-சேனல் ஏபிஎஸ், இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு, ரைடு-பை-வயர் த்ரோட்டில், வீலி கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்கல்ப்டட் எரிபொருள் டேங்க், இரட்டை LED முகப்பு விளக்குகள், ஒரு கொக்கு போன்ற நீட்டிப்பு, கார்பன் ஃபைபர் M விங்லெட்டுகள், கார்பன் ஃபைபர் எண்ட் கேப் கொண்ட டைட்டானியம் எக்ஸாஸ்ட் மற்றும் 17-இன்ச் பாலி அலுமினிய சக்கரங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. 840 மில்லி மீட்டராக இருந்த இருக்கையின் உயரம் 850 மில்லி மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.


எம் கார்பனாலான ஒருங்கிணைந்த செயின் கார்டு கொண்ட பின் சக்கர அட்டை, பக்க பேனல்கள், முன் சக்கர கவர், உள் கவர் மற்றும் இக்னிஷன்/ஸ்டியரிங் லாக் கவர் மற்றும் சவாரி மற்றும் பயணிகளுக்கு முழுமையாக சரிசெய்யக்கூடிய எம் ஃபுட்ரெஸ்ட்கள் ஆகியவை உள்ளன. இதனால், இந்த வாகனத்தின் எடை முந்தைய மாடலை காட்டிலும் 3 கிலோ குறைவாகியுள்ளது.


இந்தியாவில் எப்போது வரும்?


BMW நிறுவனத்தின் M 1000 XR மற்றும்  S 1000 XR updated ஆகிய இரண்டு மாடல்களுமே அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI