திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் உள்ள மார்க்கெட் வீதியில் தனியார் காம்பளக்ஸ் ஒன்று இயங்கி வருகிறது. இதில் பல வகையான கடைகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு பகுதியில் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் கிராமத்தை சேர்ந்த திலிப்சிங் (40) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஆரணி பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். மேலும் இவர் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு. சென்றுள்ளார் அதன் பிறகு காலையில் வீட்டில் இருந்து தனது செல்போன் கடையை திறப்பதற்காக வந்துள்ளார் அப்போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உள்ளிட்ட சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்யைடித்து சென்றது தெரிய வந்தன.
மேலும் இச்சம்பவம் குறித்து திலிப்சிங் ஆரணி நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கொள்ளை நடந்த இடத்தில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடையங்களை சேகரித்தனர். அதன் பின்னர் ஆரணி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காந்தி ரோடில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொள்ளையில் துப்பு துலக்க மாவட்ட காவல் கண்காணிக்காப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் ஆரணி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் ஆரணி நகர காவல்நிலைய ஆய்வாளர் கோகுவராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து தனிப்படை காவலர்கள் மேற்படி சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும் திருவண்ணாமலை சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் சோனாபோர்டாவை சேர்ந்த ஜாலம்சிங் ரத்தோர் வயது (27), விக்ரம்சிங் வயது (34), ரகுல்சிங் வயது (30) ஆகிய மூவரும் ஆற்காடு தனியார் கல்லூரி பேருந்து நிலையத்தின் அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விரைந்து சென்ற தனிப்படையினர் குற்றவாளிகளை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மொபைல் காம்போ எல்பிடி 525, மொபைல் டச் ஸ்கிரின் 1100 மற்றும் மொபைல் டிஸ்பிளே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை காவல்துறையினர் கொள்ளை அடிக்கப்பட்ட 48 மணிநேரத்தில் திருட்டில் இடுப்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர். இதனால் ஆரணி பகுதியில் உள்ள பொதுமக்கள் வெகுவாக காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த வழிப்பறி மற்றும் டாஸ்மாக் ஊழியர் கொலை தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி இரண்டு நாட்களாக காட்டு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளையர்களில் ஒருவனை என்கௌண்ட்டர் செய்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையன் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவனோடு கொள்ளையில் ஈடுபட்ட பிற கொள்யையனும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்படதக்கது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வட மாநில கொள்ளையர்களின் ஆதிக்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது