திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தில் இரவு போளூர் நோக்கி வந்த காரும் போளூரில் இருந்து செங்கம் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும்  நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில்  வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் இரு சக்கர வாகனத்தில் பணித்து வந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நிறைமாத கர்ப்பிணியான பெண் விபத்தில் இரண்டு கால்களும் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த விபத்தினை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து  கால் முறிவு ஏற்பட்டு கேட்பாரற்று கிடந்த கர்ப்பிணியை அங்குள்ள பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் கர்ப்பிணியை மீட்டு உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும் இது குறித்து பொதுமக்கள் கடலாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்தும் அப்போது அங்கு தூக்கி வீசப்பட்டதில் விபத்து ஏற்பட்ட இடத்தில்  விழந்து இறந்தவர்களிடமிருந்த ஆதார் அட்டை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்  மோதியதில் போளூரில் இருந்து செங்கம் நோக்கி இருச்சகர வாகனத்தில் வந்தவர்  கிருஷ்ணகிரி மாவட்டம் உப்பிரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன்  ரகு (25) இவருடைய மனைவி சுமித்ரா (22) இவர்களின் ஒன்றரை வயது மகன் பூமிரதன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எங்கு செல்கின்றனர் என்பது குறித்து தெரியவில்லை.


இதையடுத்து காவல்துறையினர் குழந்தையின் உடல் மற்றும் அவரது தந்தையின் உடலையும் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கால் முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த  கர்ப்பிணி சுமித்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக அவரும் உயிரிழந்தார். இந்த கோரவிபத்து குறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.



 


இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதுவும் கர்ப்பிணி பெண்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றது இங்கு வேகத்தடை அமைக்ககோரி பலமுறை பொதுமக்கள் தெரிவித்து இதுவரை அமைக்கப்படவில்லை இதனால் விரைந்து நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.