திருவண்ணாமலை நகராட்சி மிகவும் பிரபலமான பொன் ராயர் உயர்தர சைவ உணவகம் நான்கிற்க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்த சைவ உணவகத்தில் நேற்று நண்பகல் மதிய உணவு சாப்பிட்டுவதற்கு ஒருவர் சென்றுள்ளார். அப்போது சாப்பாடு ஒன்று ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அவருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது, அவர் அந்த உணவை சாப்பிட சாம்பார் ஊற்றி சாப்பாட்டை பிசைந்துள்ளார். அப்போது அந்த உணவில் காயங்களுக்கு ஒட்டப்படும் பேண்டேஜ் இருந்ததால் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக அவர் உணவகத்தின் வேலை புரியும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உணவகதின் ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தால் அவருக்கு மீண்டும் உணவு அளிக்கப்பட்டது. பின்னர் உணவகத்தின் ஊழியர்களிடம் உணவகத்தின் மேளாலர் அவர்களுக்கு ஏன் மீண்டும் உணவு அளித்தீர்கள் என்று உணவு பரிமாறும் ஊழியர்களிடம் கடுமையாக பேசி உள்ளார். அதன் பிறகு ஆத்தரம் அடைந்த அந்த நபர் உணவகத்தில் சாப்பிட வந்த நபர்களிடம் இந்த உணவகத்தில் எங்களுக்கு வழங்கபட்ட உணவில் காயங்களுக்கு போடக்கூடிய பேண்டேஜ் இருந்தது என்று கூறி உணவகத்தில் உள்ளே வெளியேயும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் இந்த வீடியோ அதிக அளவில் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உணவில் காயங்களுக்கு ஒட்டப்படும் பேண்டேஜ் இருந்ததால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சில மாதத்திற்கு முன்பு ஆரணியில் உள்ள தனியார் 5 ஸ்டார் அசைவ உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மாணவி மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதே போல் மேமாதம் இந்த அசைவ உணவகத்தில் பள்ளி மாணவன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகிய அசைவ உணவு சாப்பிட்ட மாணவன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த மாணவரும் திடிரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தரமற்ற உணவுகளை வழங்கி வரும் உணவகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால் தொலைபேசி எடுக்கவில்லை