திருவண்ணாமலை (Tiruvannamalai News) திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே பெரணமல்லூர் ஊராட்சியில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்த பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகின்றனர். ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த இந்திரா இளங்கோ என்பவர் உள்ளிட்ட 16 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் சகோதரர் அறிவழகன் (எ) ஜவகர் என்பவர் அதிமுகவில் நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில், செய்யாற்றில் அதிமுக அண்ணா தொழிற் சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் செயல்வீரர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இது சம்மந்தமாக சில தினங்களுக்கு முன்பு பெரணமல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன், அதிமுக வரவேற்பு குறித்து போஸ்டர் ஓட்டியுள்ளார். அப்போது பெரணமல்லூர் அரசு ஓன்றிய அலுவலகம் வளாகத்தில் போஸ்டரை அதிமுகவினர் ஒட்டியுள்ளனர். அரசு அலுவலங்களில் போஸ்டரை ஒட்டக்கூடாது என்று அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து மறுநாள் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரை அரசு ஊழியர்கள் கிழித்துள்ளனர். இதனை அறிந்த அதிமுக நகர துணை செயலாளர் ஜவகர் ஆத்திரமடைந்து மீண்டும் மறுநாள் ஜூன் 08-ஆம் தேதி அன்று மீண்டும் அதே போஸ்டரை அதே இடத்தில் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் குறித்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன்
அதிமுகவை சேர்ந்த ஜவகரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அரசு அலுவலங்களில் ஏன் போஸ்டர் மீண்டும் மீண்டும் ஒட்டி வருகின்றீர்கள் என போனில் கேட்டதற்கு, அப்போது ஜவகர், மிரட்டும் தொனியில் எவனா இருந்தாலும் வெட்டுவேன் என அதிகாரியை மிரட்டியுள்ளார். இவர்கள் இருவரும் பேசும் ஆடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகின்றது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் கோவிந்தராஜ் ஆகியோர் தனித்தனியாக பெரணமல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 2 புகாரை பெற்ற பெரணமல்லூர் காவல்துறையினர் 5 பிரிவின் அதிமுக பிரமுகர் ஜவகர் மீது கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிமுக பிரமுகர் ஜவகர் தலைமறைவாகியுள்ளார். தற்போது அவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.