திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் வயது (45). இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி தமிழரசி வயது (40) இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழரசியின் நடத்தையில் தாமோதரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை என்கிற சுரேஷ் வயது (43) இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். சுரேஷுக்கும் தாமோதரனின் மனைவி தமிழரசிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தாமோதரனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தாமோதரன் மனைவி தமிழரசிக்கும் தாமோதரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.



திருவண்ணாமலை : திருமணத்தை மீறிய உறவில் மனைவி; மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை


 


இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமோதரன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அவருடைய பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆட்கள் யாரும் வீட்டில் இல்லாததை அறிந்த தாமோதரன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஏழுமலை என்கிற சுரேஷ் மற்றும் தமிழரசி இருவரும் ஒரே அறையில் ஒன்றாக இருந்ததை தாமோதரன் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று காலை வீட்டில் இருந்து பிள்ளைகள் பள்ளிக்கு சென்ற பிறகு 9 மணியளவில் தனது வீட்டிலேயே தாமோதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் தச்சம்பட்டு காவல் நிலையத்தில் ஏழுமலை என்கிற சுரேஷ் மற்றும் தமிழரசி இதுவரையும் கைது செய்ய வேண்டும் என நேற்று புகார் அளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மணலூர்பேட்டை சாலை தச்சம்பட்டு காவல் நிலையம் எதிரே தாமோதரனின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.




 


தங்களது தந்தையின் மரணத்திற்கு காரணமான தமிழரசி மற்றும் அவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த ஏழுமலை என்கிற சுரேஷ் இருவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மகள்கள் மற்றும் மகன்களின் கோரிக்கையாக உள்ளது. சடலத்துடன் சாலை மறியல் ஈடுபட்ட உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.


தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)