திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் பசும் பொன் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ் (29), இவர் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார். சதிஷ் செய்யாறு தனது வீட்டில் இருந்து வழக்கம்போல் பணிக்கு வந்தவாசி தாலுக்கா அலுவலகத்திற்கு  சென்றுள்ளார். பின்னர் பணிகள் முடிவடைந்த பிறகு இரவு தனது இருச்சக்கர வாகனத்தில்  வீட்டிற்கு  திரும்பியுள்ளார். அப்போது புரிசை கிராமம் பகுதி  பேருந்து நிலையம்  நிறுத்தம் அருகே வந்தபோது இயற்கை உபாதைக்காக இருசக்கர வாகனத்தை  நிறுத்தி விட்டு சிறிது இடைவெளி தூரம் சென்று இயற்கை உபாதையை கழித்துள்ளார். முடித்து விட்டு இருசக்கர வாகனம் அருகில் வந்துள்ளார். 



அப்போது வந்தவாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்கள் , சதீஷ் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு 'வந்தவாசிக்கு எப்படி செல்லவேண்டும்' எனக்கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ் வழியை கூறியபோது, மர்ம நபர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அப்போது சதிஷ் கூச்சலிட முயன்றுள்ளார் மேலும் சதீஷை சரமாரி தாக்கி, அவரது கழுத்தில் இருந்த 1 சவரன் தங்க செயின் மற்றும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், மணி பர்சை பறித்து கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு 3 நபர்களும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டனர். மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற பர்சில் ஏடிஎம் கார்டு மற்றும் வங்கியின் கணக்கில் சிறிதளவு பணம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் அருகில் உள்ள அனக்காவூர் காவல்நிலையத்தில் சென்று நடந்த சம்பத்தை கூறி  புகார் அளித்துள்ளார். அதன்பேரில் துணை காவல் ஆய்வாளர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.



அதனை தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து அரசு அதிகாரியை தாக்கிவிட்டு கொள்ளை அடித்து சென்ற நபர்களை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நகையை பறித்துச் சென்றவர்கள் தென்னாங்கூரை சேர்ந்த பூபாலன் (21), அவரது நண்பர்களான எச்சூர் பள்ளக் காலனியை சேர்ந்த யோகேஷ் குமார் (21), ராகுல் (21) என்பதும், இவர்கள் அதேபகுதியில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு அங்கு சென்ற காவல்துறையினர் பூபாலன், யோகேஷ்குமார், ராகுல் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 நபர்களையும கைது அனக்காவூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் இந்த விசாரணையில் இவர்கள் இதேபோன்று இரண்டு நபர்களிடம்  கொள்ளையடித்தது தெரிய வந்தது பின்னர் காவல்துறையினர் இவர்கள் 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொலை நடந்த நேரத்தில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில்  வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது செய்த  காவல்துறையினரை அப்பகுதியில் உள்ள பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்