திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கல்லூரி முடித்து விட்டு வீட்டில் உள்ளார். ஆரணி அடுத்த  அழகுசேனை கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரவிந்த் குமார் (24) என்பவர் 3 ஆண்டு முன்பு அவருடைய நண்பரை அழைப்பதற்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது தவறுதலாக அந்த  இளம் பெண்ணிற்கு அழைப்பு சென்றுள்ளது. அழைப்பை எடுத்த இளம்பெண் நீங்கள் மாற்றி ராங்கால் செய்துள்ளீர்கள் என்று கூறி அழைப்பை  துண்டித்துள்ளார். அதனை தொடர்ந்து அரவிந்த் குமார் மீண்டும் அந்த இளம் பெண்ணிற்கு அழைப்பை விடுத்துள்ளார். அழைப்பை எடுத்த இளம்பெண் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டுள்ளனர். 



காதல் மோகத்தால் இளம்பெண்ணிடம் அரவிந்த்குமார் ஆசை வார்த்தைகளை கூறி இளம் பெண்ணிடம் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை தனிமையில் இருந்துள்ளார். இதில் அந்த இளம்பெண் சில நாட்களுக்கு முன்பு சோர்வாக இருந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துமணையில் சென்று பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை செய்ததில் 5 மாதம் கர்ப்பம்மாகி உள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இளம்பெண் உடனடியாக சென்று காதலன் அரவிந் குமாரை சந்தித்து உங்களால் 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன். உடனடியாக திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் காதலன் அரவிந் குமார் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் காதலன் அரவிந்த்குமார் என்பவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.



 


நாட்டு நாய்.. கும்கி..மாட்டுமா புலி | Operation T23 | Nilgiris | Man Eater Tiger | Forest Department


இந்த விசாரணையில் இளம்பெண்ணை கர்ப்பம்மாக்கி திருமணத்திற்கு மறுத்து உண்மைதான் எனக்கூறியுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் காதலனை காவல்துறையினர் கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர். ஆரணி அருகே ராங்காலில் வந்த பயக்கத்தால் இளம் பெண்ணின் வாழ்க்கை கேள்விகுறியாக உள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மோதி கொள்ளும் சென்னை vs டெல்லி..யாரு கெத்து? அடிச்சு காமி | IPL 2021 | CSK vs DC Preview | MS Dhoni