திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கணவனை இழந்து விட்டு தன்னுடைய 8 வயது மகளுடன் கூலி வேலை செய்து வருகின்றார். அப்பகுதியில் மாடு மேய்க்கும் முதியவர் முனுசாமி (67) தன்னுடைய மாட்டை மேய்க்கும் போது அவ்வழியே சென்ற உள்ள சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து பழகியுள்ளார். வழக்கம் போல நேற்று சிறுமியின் வீட்டிற்கு முதியவர் வந்தபோது, சிறுமியின் தாயார் வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டின் பின் பக்கத்தில் உள்ள கழிவறை பகுதியில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது சிறுமி வலி தாங்காமல் சிறுமி அழுத்துள்ளார். அழுத சத்தம் கேட்ட சிறுமியின் தாயார் ஓடி வந்து பார்த்துள்ளார், அப்போது சிறுமியிடம் முனுசாமி தகாத முறையில் ஈடுப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் முனுசாமியிடம் சன்டையில் இடுப்பட்டுள்ளார். சிறுமியின் தாயாரை தாக்கி விட்டு இந்த சம்பவத்தை பற்றி நீ வெளியே மற்றவரிடம் தெரிவித்தால் நீ இந்த ஊரில் உன்னால் வசிக்க முடியாது உன்னை கொன்று விடுவேன் என்றும் முனுசாமி மிரட்டியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாயார் வெளியில் சொல்ல முடியாமலும், குழந்தையின் எதிர்காலத்தை என்னி அவர் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். பின்னர் அவருடைய அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயார் நடந்த சம்பவத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
யார் அந்த அர்ஜூன்? வலிமை Glimpse - ல இத கவனிச்சீங்களா..! | Glimpses of Valimai | Ajith Kumar |
மேலும் அந்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து முனுசாமியை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் முனுசாமியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முனுசாமி தொந்தரவு செய்தது ஒப்புக்கொண்டார். அதன் பிறகு முனுசாமியை குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதனைத்தொடர்ந்து முனுசாமியை காவல்துறையினர் வேலூர் சிறையில் அடைத்தனர். 8 வயது சிறுமியை 67 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து 1098 என்ற சைல்டு ஹெல்ப் லைன் எண்ணில் புகார் அளிக்கலாம்