திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை-திண்டிவனம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி வயது (23), போளூர் சிவராஜ் நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரத்குமார் வயது (29) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல கண்ணமங்கலம் அருகே குப்பம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த ஜெயசூர்யா வயது (21) என்பவர் கஞ்சா விற்ற போது, கண்ணமங்கலம் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கஞ்சா விற்பதாக செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மோரணம் காவல்நிலைய துணை ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிவளாகம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா கலவை பகுதியை சேர்ந்த ராகுல் வயது (19) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு விற்பதற்காக கஞ்சா பாக்கெட் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து காவல்துறையினர் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ராகுலை கைது செய்து தீவரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெங்கோடு கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கீழ்க்கொடுங்க நல்லூர் ஆய்வாளர் ராஜா, துணை ஆய்வாளர் கோவிந்தராஜலூ மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள ஏரியில் காவல்துறையினர் மறைந்து இருந்து நோட்டமிட்டனர். அப்போது இளைஞர்கள் முள்புதார் அருகே சென்று வருவதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விரைந்து சென்றனர். காவல்துறையினரை கண்டதும் கை வைத்திருந்த வாலிபர் கைபையை தூக்கி முள்புதர்களுக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார் அப்பொழுது காவல் துறையினர் அவரைத் துறையில் சென்று பிடித்தனர் பின்னர் அவர் கீழே வீசிய பையை காவல்துறையினர் சோதனை செய்த போது ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களாக இருந்தது தெரியவந்தது விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் விக்னேஷ் குமார் வயது (21) என்றும் இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பது தெரியவந்தது இது குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் குமாரி கைது செய்து சிறையில் அடைத்தனர்.