திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தாய் மாமன் சுண்டிவக்காம் கிராமத்தை சேர்ந்த வினோத் வயது (26) ஆவார். இவர் இருசக்கர பழுதுபார்க்கும் கடையில் வேலை புரிந்து வருகிறார். இந்நிலையில் மாமன் மகளான சிறுமியும், வினோத் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன் இரு வீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு சிறுமியுடன் வினோத் நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியை அவருடைய பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளதாக  தெரிவித்தனர்.




 


இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்தனர். அதில் வினோத் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாகவும் வினோத்திடம் பலமுறை நெருக்கமாக இருந்ததால் தான் கர்ப்பம் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் பிரியா சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து, 6 மாதம் கர்ப்பம் ஆக்கிய வினோத் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார். பின்னர் வினோத்தை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிறுமி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததும் மற்றும் 6 மாதம் கர்ப்பமாக உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 




அதேபோல் திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 13ஆம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் பாலியல் தொந்தரவு பாலியல் சீண்டல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது புகார் அளிக்க திருவண்ணாமலை மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் எண்கள் திருவண்ணாமலை 04175-253144 ,செங்கம் - 224100 ,போளூர் -224499, ஆரணி -226684, செய்யாறு - 220620, வந்தவாசி- 227593 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர