திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை கிராமம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் கன்னியம்மாள் ( 19) அனக்காவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BCom இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தாமோதரன் அதிகாலையிலே வேலைக்குச் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற அவரின் மனைவியும், மகனும் நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டில் கன்னியாமல் காணவில்லை வீட்டில் இருந்த கன்னியம்மாளை தேடினர். அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் கன்னியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர்
இதுகுறித்து அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, கன்னியாமல் உடலை மீட்டு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
Sivashankar Baba: ‛கலர் கலர் சட்டை... கூலிங் கிளாஸ்... மாடர்ன் அவதாரம் மாட்டிய கதை!
போலீசார் அங்கு உள்ளவர்களிடம் முதல் கட்ட விசாரணையில் தென்இலுப்பை கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சரவணன் (22) என்பவர் அடிக்கடி கன்னியம்மாளை செல்லும் இடங்களில் என்னை காதல் செய்ய வேண்டும் என்று கூறி தொந்தரவு செய்துவந்ததாகவும் அதுமட்டுமின்றி கன்னியம்மாள் செல்போனில் பேசி வந்ததாகத் தெரிகிறது. அதேபோல் நேற்று காலை செல்போனில் கன்னியம்மாளிடம் பேசி உள்ளார். அதில் மனமுடைந்த கன்னியம்மாள் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிந்திருந்ததால் தனது மகள் சாவுக்கு வாலிபர் சரவணன் தான் காரணம், என தந்தை தாமோதரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து சரவணனை வீட்டில் சென்று பார்த்த போலிசார் வாலிபர் தலைமறைவு ஆனது செரியவந்தது.
இதற்கிடையே, வாலிபரை கைது செய்யக்கோரி கன்னியம்மாளின் குடும்பத்தினரும், உறவினர்களும் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை வளாகப் பகுதியில் கூச்சல் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விரைந்து வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து தலைமறைவான சரவணனை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். சரவணன் அவருடைய பாட்டி வீட்டில் பதுங்கி இருந்தாக தகவல் கிடைத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் சரவணனை கைது செய்து அனுக்காவூர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அதில் தான் காதல் செய்ய சொல்லி தொந்தரவு செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். அதை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு. சரவணனை சிறையில் அடைத்தனர்.