Watch video: பணகுடி மெயின் சாலையில் ஸ்கூட்டரை திருடிச் செல்லும் டிப் டாப் இளைஞர்..!

ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் சாலையில் டிப் டாப்பாக உடை மற்றும் நகை அணிந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்கிறார்.

Continues below advertisement

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் பணகுடி மெயின் ரோட்டில் உள்ள மாதா கோவில் அருகே போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் தனது கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்கு அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்து உள்ளார். இதனை கவனித்த மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்று உள்ளார். 

Continues below advertisement

மீண்டும் திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  மேலும் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் டிப் டாப்பாக உடை அணிந்த வாலிபர் ஒருவர் நொடிப்பொழுதில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. மேலும் அந்த வாலிபரின் உருவம் தெளிவாக தெரிவதால் அக்காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போயிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் சாலையில் டிப் டாப்பாக உடை மற்றும் நகை அணிந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: Watch Video: சமந்தாவை அலேக்காக தூக்கி ஆட்டம் போட்ட அக்‌ஷய்! வைரலாகும் டான்ஸ் வீடியோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola