நெல்லையை அடுத்த நடுக்கல்லூர்  பகுதியை சேர்ந்தவர் நாகராஜன், இவர் நூற்றுக்கணக்கான ஆடுகள் வளார்த்து வருகிறார், இந்த சூழலில் இன்று காலை தனக்குச் சொந்தமான 100 ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார், அப்போது கல்லூர் ரயில்வே கேட் அருகே மேய்ச்சலுக்காக ஆடுகளுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். திடீரெனெ அங்குள்ள திருப்பத்தில் ஆடுகள் சென்று கொண்டிருந்தபோது கல்லூர் - சீதபற்பநல்லூர் சாலை திருப்பத்தில் கிரஷர் மணல் ஏற்றி வந்த லாரி வேகமாக வந்துள்ளது,  கண்ணிமைக்கும் நேரத்தில் கிரஷர் மணல் லாரி ஆடுகள் கூட்டத்தின் மீது பாய்ந்தது.




அப்போது கூட்டமாக சென்று கொண்டிருந்த ஆடுகள் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து மடிந்தது, இதனை கண் முன்னே பார்த்த ஆட்டின் உரிமையாளர் நாகராஜன் செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டார், ஆனால் நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவத்தால் 37 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. மேலும் சில ஆடுகள் படுகாயமடைந்தது, சம்பவத்தை தொடர்ந்து லாரியின் உரிமையாளர் லாரியில்  இருந்து இறங்கி தப்பியோடி சென்றார், அதன்பின் சுற்றியிருந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் சூழவே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,




இது குறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாரி மோதி கண்முன்னே தான் வளர்த்த ஆடுகள் இறந்ததை கண்ட நாகராஜன் கதறி அழுதது அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது, மேலும் உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு பல லட்சம் இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது,  தலைமறைவான லாரி டிரைவரை போலீஸார் தீவிரமாக தேடிவரும் சூழலில் ஆடுகள் கூட்டத்தில் லாரி மோதி 37 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.