தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித், உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இன்னிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி மதியம் நீதிமன்றத்தில் தனது பணியை முடித்துவிட்டு கோவிந்தன்பட்டி அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். காரிலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் பற்றி தகவல் தெரிந்த உத்தமபாளையம் போலிசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் குற்றவாளிகளை பிடிக்க 2 பிரிவு போலிசாரை அனுப்பி கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் விசாரணை செய்து வந்தனர். இன்னிலையில் போலிசாரின் விசாரணையில் இந்த கொலை கூலிப்படையால் செய்யப்பட்டது என தெரியவந்தது.
கொலையில் கூலிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கம்பம் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயபிரபு இவர் முன் விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி ரஞ்சித்தை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மதன் , ராஜேஸ் , ஆனந்த் ,வேல் முருகன், சஞ்சய் குமார் , ராஜா என்ற கூலிப்படையை சேர்ந்த 6 பேரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடலூர் அருகே குள்ளப்பம்பட்டியில் ரஞ்சித் மற்றும் ஜெயபிரபு இருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்ததும் அதில் ரஞ்சித் கூலிப்படையை ஏவி கொலை செய்ததும் தெரியவந்த நிலையில் வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி செல்லும் வழிசாலையில் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சம்பவம் தெரிந்த உத்தம்பாளையம் போலிசார் விரைந்து சென்று உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர் கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் மதன் என்பது தெரியவந்தது. கொலைக்கான காரணமாக கூறப்படுவது, கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித் கொலைக்கு பழிக்கு பழியாக ஜெயபிரபுவின் கூட்டாளியான மதன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்