தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கனகமணி (வயது 62). இவர்களது மகன் வேல்முருகன் (36). இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார், கடந்த 11-ந் தேதி மீண்டும் அவர் தனது தாயிடம் தகராறு செய்தததாக கூறப்படுகிறது.




இந்நிலையில் 12-ந் தேதி காலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக கனகமணி அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வேல்முருகன் சாவில் சந்தேகம் இருப்பதாக உத்தமபுரம் கிராம நிர்வாக அதிகாரி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் வேல்முருகனின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.




அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து தீவிர  விசாரணை நடத்தினர். அதில் கனகமணி, தனது சகோதரர் குமார் (45), உறவினர்கள் கண்ணன் (57), கருப்பையா (45) ஆகியோருடன் சேர்ந்து வேல்முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் நிலையத்தில்  அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து தாய் என்றும் பாராமல் அவரை அவதூறாக பேசி வந்தார்.




இதனால் மனவேதனை அடைந்த கனகமணி, வேல்முருகனை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தனது தாயிடம் வேல்முருகன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கனகமணி, குமார், கண்ணன், கருப்பையாவுடன் சேர்ந்து நைலான் துணியால் வேல்முருகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப தகராறில் மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண