கம்பம் அருகே காட்டு பகுதியில் காருக்குள் கேரளாவை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் இறந்த நிலையில் கிடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் இரு மாநில எல்லை சாலையான கம்பம் மெட்டு சாலையில், கன்னிமார் ஓடை எனும் பகுதியில் இன்று காலை முதல் கேரள எண் பதிவு கொண்ட ஒரு கார் நீண்ட நேரமாக புளிய மரத்தடியில் நின்று கொண்டிருந்ததாகவும், அந்த வழியே வேலைக்கு சென்ற சிலர் காருக்கு அருகே சென்று பார்த்த போது காருக்குள் மூன்று பேர் கிடந்ததை பார்த்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.




பின்பு உடலை கைப்பற்றி சோதனை செய்த போலீசாருக்கு மூன்று பேரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது காருக்குள் ஒரு பெண் உட்பட மூன்று பேர் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரை திறந்து சோதனை செய்தபோது மூன்று பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.




மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கணவன் ஜார்ஜ் ஸ்காரியா (50), மனைவி மெர்சி(45), மகன் அகில் (35) என்பதும் தெரியவந்தது. இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலையா? என்று சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது


தேனி மாவட்டம் போடியில் ஜே.கே.பட்டி பாரதிநாராயணசாமி தெருப்பகுதியில் வசித்து வந்த தம்பதிகள்  மோகன் 42 மனைவி கார்த்திகா 35. ஏலக்ட்ரீசீயன் பணிபுரிந்து வந்த மோகன் கடந்த 12ஆம் தேதியன்று குடிபோதையில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக மோகனின் தாயார் வண்ணக்கிளி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்தனர்.


மருத்துவ பரிசோதணை அறிக்கையில் பலமாக நெஞ்சில் தாக்கப்பட்டு நெஞ்செலும்பு முறிந்து இறப்பு ஏற்பட்டதாக தெரிய வந்த நிலையில், காவல்துறையினரின் விசாரணை இறுக்குவதை அறிந்து மோகன் மனைவி கார்த்திகா 35, போடி நகர்கிராமநிர்வாக அலுவலர் ராஜாமணி முன்பு ஆஜராகி அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் மோகன் குடிபோதைக்கு அடிமையானவர் என்றும் சம்பவநாளில் வீட்டில் இருந்த ஆண்ராய்டு போனை விற்றுவிட்டு போதையில் வீட்டிற்கு வந்ததாகவும் இதனால் கணவன் மனைவி இருவரும் -இடையே தகறாறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த கார்த்திகா கம்பாலும், காலாலும் தாக்கியதில் கணவன் உயிரிழந்ததாகவும் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய போடிநகர காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், கார்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.