தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் 32 வயதான முத்துமாரி. லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த மதுரை வீரன் என்பவரது மகள் விஜித்ரா-வுக்கும் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துமாரி என்பவர் லாரி டிரைவர் ஆக வேலை செய்வதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் அவரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது . முத்துமாரி என்பவர் அவரது மனைவி வேறு யாருடனோ பழக்கம் வைத்துள்ளார் எனக் கூறி அவரது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முத்துமாரி, விஜித்ரா இருவருக்கும் சண்டை அதிகமாகி விஜித்ரா கோபித்துக் கொண்டு அவர்களது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி விட்டுள்ளார் .
அதன் பிறகு ஊர் பெரியோர்களை வைத்து பேசியபோது முத்துமாரி என்பவர் அவரது மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என சொல்லி உள்ளார். அதனால் விஜித்ராவின் உடன் பிறந்த தம்பியான 26 வயதான இளைஞர் விஜய் என்பவர் அவரது அக்கா வீட்டுக்காரரான முத்துமாரி என்பவரை பார்த்து என் அக்காவுடன் சேர்ந்து வாழ வில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். முத்துமாரி மனைவியுடன் சண்டை போட்டு மனைவியிடம் இருந்து தாலியை வாங்கி உள்ளார். அதன்பின்பு 29.2.24 ம் தேதி இரவு 8 மணி அளவில் முத்துமாரி தாய் 55 வயதான மலையாயி, மலையாயின் மச்சானும் அவர்களது பகுதியில் உள்ள சமுதாய சாவடி அருகில் இருந்தபோது முத்துமாரி அவரது மனைவியின் தம்பியான விஜய் மற்றும் சிந்துவம்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் கௌதம் ஆகிய இருவரும் சேர்ந்து பைக்கில் ஏற்றிக்கொண்டு அழைத்து சென்றுள்ளனர் .
இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு மலையாயி எழுந்து முத்துமாரியை வீட்டில் தேடியபோது வீட்டில் இல்லாததை அறிந்து இரவு முத்துமாரி வீட்டிற்கு வராததை அறிந்து கொண்டு மலையாயி மற்றும் மலையாயி மச்சானும் தேடிச் சென்றபோது குள்ளபுரம் CDR கல்குவாரி அருகே 18ம் கால்வாய் கூட்டாத்து பாலத்திற்கு கீழே திட்டில் முத்துமாரி ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார் .
முத்துமாரி குடும்ப பிரச்சனை காரணமாக விஜய் மற்றும் கௌதம் ஆகிய இரண்டு இளைஞர்களும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாகவும் மகன் இறப்பிற்கு காரணமான இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி ஜெயமங்கலம் காவல்துறையினருக்கு இறந்த முத்துமாரி தாயார் மலையாயி கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் காவல்துறையினர் 1.3.24 ம் தேதி காலை 8 மணி அளவில் குள்ளபுரம் கீழ தெருவை சேர்ந்த 26 வயதான இளைஞர் விஜய் ,பெரியகுளம் அருகே உள்ள சிந்துவம்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.