தருமபுரி : தொடர் சையின் பறிப்பில் ஈடுபட்ட பெண்.. போலீஸிடம் சிக்கியது எப்படி..?
தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளிடம் தொடர் சையின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி உதவியால் காவல் துறையினர் கைது செய்து விசாரணை.
Continues below advertisement

செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது
தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளிடம் தொடர் சையின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி உதவியால் காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நகர பேருந்துகளில் பெண் பயணிகளிடம், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளோடு பயணியாக கூட்டத்தில் சேர்ந்து பல நாட்களாக மணிபர்ஸ், நகைகள், செல்போன் என ஏராளாமான பயணிகளிடம் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக புகார்கள் அதியான்கோட்டை, மதிகோன்பாளையம், தருமபுரி நகர காவல் நிலைத்திற்கு புகார் வந்துள்ளது. இதனால் தருமபுரி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். அப்பொழுது பெண் ஒருவர், கூட்டமாக பேருந்து ஏறும் பயணிகளிடம், தங்க நகைகள், பணம், செல்போன் பறிப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
அதையடுத்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வினோத், பெண் காவலர்கள் கொண்ட குழுவினரை, சாதாரண பயணிகளை போல, மாறுவேடத்தில் பெண் காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்திரவிட்டார். அப்போது பயணிகளாக இருந்த பெண் காவலரிடம் இந்த பெண் பிக்பாக்கெட் அடிக்கும் போது, கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இந்த பெண் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மலர்கொடி என்பது தெரியவந்தது. இவர் சேலம், ஈரோடு, தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட பகுதிகளுக்கு சென்று, பேருந்து நிலையம் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடம் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையே தொழிலாளாக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இதுவரை எவ்வளவு பணம், நகை திருடப்பட்டது. இதனை எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மலர்கொடியிடமிருந்து, கம்மல், செயின் உள்ளிட்ட 3.5 சவரன் தங்க நகைகளும், விலை உயர்ந்த நவீன வசதிகள் கொண்ட ஸ்மாட் செல்போன் 4, பணம் ரூ.40,000 மற்றும் மணிபர்ஸ்களும் சிக்கியது.

இதனை தொடர்ந்து மலர்கொடியை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த 3.5 சவரன் தங்க நகைகளும், விலை உயர்ந்த நவீன வசதிகள் கொண்ட ஸ்மாட் செல்போன் 4, பணம் ரூ.40,000 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுப்போன்று வேறு பெண்கள் யாராவது இருக்கிறார்களா என, இவர் செல்போன் நம்பரை வைத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி பேருந்து நிலையத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண் பயணிகளிடம், பெண் ஊருவர் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Just In
விளம்பரத்தை நம்பாதீங்க ! பகுதி நேர வேலை மோசடி: 5 கோடி ரூபாய் இழப்பு! எச்சரிக்கை!
போதை பொருளுக்கு பதிலாக அஜினமோட்டோ.. கொலையில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மாமனாரைக் கடத்தி, தெலங்கானாவில் கொன்ற மருமகன் - காரணம் என்ன?
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
“மயக்கம் வருது தண்ணீ கொடுங்க” பரிதாபப்பட்ட நபருக்கு பட்டை அடித்த இளைஞர் - டிரைவருக்கு நேர்ந்த சோகம்
'நீ ஆபாச படம் பாத்து இருக்க'' மிரட்டி பணம்பறிக்கும் மோசடி கும்பல்: சைபர் கிரைம் எச்சரிக்கை!
Continues below advertisement
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.