திருவண்ணாமலையில் வேங்கிகால் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில், எலி ஒன்று உணவு உண்ணும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பிரியாணி கடையில் பிரியாணி வைத்து உணவு பரிமாறும் பாத்திரத்தில் இருக்கும் எஞ்சிய உணவை எலி ஒன்று தின்று கொண்டிருந்தது. இதனை செல்போனில் வீடியோ எடுத்தவர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடையில் பிரியாணி சாப்பிட்டவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கடைகளை முறையாக பராமரிக்காததால் எலி உணவை உண்ணும் அளவுக்கு அந்த கடையின் நிலை உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதில் உள்ள விஷம் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு பரவி உடல் நிலைமை மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் அசைவ உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உட்பட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துமணையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அசைவ உணவக உரிமையாளர் மற்றும் சமையல் செய்தவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அசைவ உணவு பிரியர்கள் கூறுகையில் இதற்கெல்லாம் காரணம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தான் எனவும் ஏனென்றால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் உள்ளது. அதில் திருவண்ணாமலை நகர்பகுதியில் அதிக அளவில் சுற்றுலா பயிணிகள் வருகின்றனர். நகர்ப்புற பகுதிகளில் உள்ள சைவ,அசைவ உணவகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட கடை மட்டுமன்றி அனைத்து கடைகளிலும் உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பரிமாறப்படும் பாத்திரங்கள் போன்றவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஓட்டலில் பாத்திரத்தில் உள்ள பிரியாணியை எலி சாப்பிடுவது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலானது அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார் இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ராமகிருஷ்ணன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளையராஜா சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் குறிப்பிட்ட அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சமையலறை உணவுப் பொருட்கள் வைக்கும் அறை சுகாதாரம் அற்ற நிலையிலும் கழிவு நீர் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஓட்டலுக்கு நோட்டீஸ் வினியோகித்து அதிகாரிகள் இந்த குறைபாடுகளை சரிசெய்ய 5 நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளனர்.